337
ச
ம
ூ
க
இனையதளமான முகநூலில் இன்று காலை முதலே நபியவர்களை பற்றி இழிவாகவும் குர் ஆனை தரக்குறைவாகவும் முகநூல் வாசகர் வட்டம் எனும் குழுமத்தில் சந்தோஷ் என்பவர் மதவெறியை தூண்டும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.
இது உலக இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷமத்தனமான பதிவை பதிவிட்ட சந்தோஷ் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அதிரை நகர பொதுமக்கள் சார்பாக காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த புகார் மனு குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர்.