தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தஞ்சை மாவட்டம் முழுவதும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று 30/05/2021 மாலை 3.30 மணி அளவில் மதுக்கூரில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவு மையத்திற்கு வருகை தந்த அமைச்சர் அன்பில் மகேஸ், தமுமுகவினரின் கொரோனா கால சேவைகளை பாராட்டினார். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்யும் தங்களின் மகத்தான பணி போற்றுதலுக்குரியது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனையடுத்து தற்போது மிக அவசியமாக மதுக்கூர் பகுதிக்கு ஆக்ஸிஜன் செரியூட்டி வழங்க வேண்டும் என்றும், மதுக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் தமுமுக சார்பில் வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமுமுக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஃபவாஸ், திமுக மாவட்ட பொருப்பாளர் ஏனாதி பாலு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஐஏஎஸ், தமுமுக பேரூர் கழக தலைவர் ராசிக் அகமது, தமுமுக செயலாளர் பைசல் அகமது, தமுமுக பொருளாளர் முகமது சேக் ராவுத்தர், முன்னாள் மாவட்ட பொருளாளர் முகமது இலியாஸ், செயற்குழு உறுப்பினர் ஹாஜா மைதீன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் புரோஸ் கான், மாவட்ட ஊடகபிரிவு செயலாளர் அப்துல் ரஹ்மான், பேரூர் கழக செயல்வீரர்கள் முஜிபுர் ரஹ்மான், தவ்ஃபிக், நிசாருதீன், இசாம், பாசித், இம்தியாஸ் மற்றும் செயல்வீரர்கள் பலர் உடனிருந்தனர்.






