தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தேவையின்றி வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் இன்று தொடர்ந்து ஆறாவது நாளாக மதிய உணவு வழங்கப்பட்டது. மதுக்கூர் தமுமுகவின் சார்பில் மதுக்கூர் வழியாக வெளியூர் செல்லும் மக்கள், ஏழைகள் மற்றும் அனாதைகள் என சுமார் 60 நபர்களுக்கு மதிய உணவும், 800 நபர்களுக்கு தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது.
மேலும் கொரோனா காலத்தில் அயராது பணி செய்து வரும் மதுக்கூர் காவல்துறையினருக்கும் இன்று தமுமுகவினர் உணவு அளித்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கூர் தமுமுகவினர் செய்து வரும் சேவையை நேற்று முன்தினம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பாராட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.





