5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காலை ஒன்றிய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்திற்கு தேவையான கொரோனா சிகிச்சை மருந்தை வழங்கவேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசிடம் வழங்கவேண்டும், தமிழகத்திற்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியை உடனடியாக வழங்கவேண்டும், பெட்ரோல் விலை ரூ.50 எனவும், டீசல் விலை ரூ.40 எனவும் வரியின்றி நிர்ணயம் செய்ய வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அதிரை பேரூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.



