Home » பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி அதிரடி கைது!

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி அதிரடி கைது!

0 comment

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட யூ டியூப்பர் கிஷோர் கே சுவாமி கைது கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் அளித்த புகாரின்பேரில் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவு செய்ததாகவும் கிஷோர் கே சுவாமி மீது வழக்கு உள்ளது. அதில் 2 வருடங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

இருப்பினும் @sansbarrier என்ற இவரது டுவிட்டர் கணக்கு மூலமாக தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி வந்தார். பாஜக ஆதரவாளரான இவர், திமுக தலைவர்களை மிக மோசமாக விமர்சனம் செய்து வந்தது வாடிக்கையாக இருந்தது.

இந்த நிலையில்தான், முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கிஷோர் பரப்பியதாக காஞ்சிபுரம் வடக்கு திமுக ஐடி விங் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் கிஷோர் கே சாமி சங்கர் நகர் போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தாம்பரம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்துள்ளார் நீதிபதி. இதையடுத்து கிஷோர் கே சாமி, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கிஷோர் கே சுவாமி மீது போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கலகம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter