44
அதிராம்பட்டினம் பகுதியில் நிலவி வரும் குறைந்தழுத்த மின்சாரத்தால் அவ்வப்போது மின் தடை, உள்ளிட்ட சிக்கல்களை பொதுமக்களும், மின் வாரிய ஊழியர்களும் சந்தித்து வருகிறார்கள்.
இதனால் ஏற்படும் மின் தடையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் ஆவண செய்த மாவட்ட மின்வாரியம், புதுமனைத்தெரு மின்மாற்றியை திறனுள்ள 110KVA வோல்டேஜ் கொண்ட மின்மாற்றியை நிறுவியுள்ளது.
இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று மாலை அற்பணிக்கப்பட்டது.
மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.