தலைநகர் டெல்லியில் 21 வயதான பெண் காவலர் சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி கேட்டு தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் தமுமுக சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுக்கூர் பேரூர் தமுமுக சார்பில் முக்கூட்டுச்சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் தமுமுக தலைவர் ராசிக் அஹமது தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் பைசல் அஹமது வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட மற்றும் பேரூர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மருத்துவ அணி செயலாளர் முஸ்தபா, லால்பேட்டை ரசீது ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் புரட்சி கழக மாநில தலைவர் அரங்க. குணசேகரன், தமுமுக தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் சலீம், மமக மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை பாதுஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இறுதியில் இளைஞர் அணி துணை செயலாளர் இம்தியாஸ் நன்றியுரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், மதுக்கூர் ஜமாஅத்தார்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அநீதிக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.








