அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், தலைவர் MSM. அபுபக்கர் அவர்கள் தலைமையிலும், பிற முஹல்லா நிர்வாகிகள் முன்னிலையிலும், நமதூர் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் மாலை 5:00 மணியளவில் நடைபெற்றது.
கிராஅத்தடன் துவங்கிய இக்கூட்டத்தில் செயலாளர் M. நெய்ணா முகம்மது அவர்கள், இக்கூட்டமைப்பு துவங்கியதின் நோக்கம் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இக்கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து தலைவர் MSM. அபுபக்கர் அவர்கள் தலைமையிலான நிர்வாகத்தின் காலம் நிறைவடைந்தது குறித்து அளித்த கடிதம் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. அதன்பின் ஷம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் செயலாளர் பேராசிரியர். அப்துல் காதர் அவர்கள் இனி வரும் காலங்களில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சீராக வீரியத்துடன் செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். அத்துடன் நடுத்தெரு – ஷம்சுல் இஸ்லாம் மற்றும் நெசவுத் தெரு – அல் முஆதினுல் ஹசனாத்துல் இஸ்லாம் ஆகிய சங்கங்களுக்கு புதிதாக தேர்வான நிர்வாகிகள் அறிமுகம் நிகழ்வு நடைபெற்றது. அதன்பின் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கு கீழ்க்காணும் சகோதரர்கள் புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். அதன் விபரம் பின்வருமாறு:
- தலைவர்: PMK. தாஜுதீன் – 97500 44349 – மேலத்தெரு
- துணை தலைவர்: M. நெய்ணா முகம்மது – 9442223190 – தரகர் தெரு ( ஆசாத் நகர்)
- செயலாளர்: MSM.
முகம்மது யூசுப் – 99408 51581 – நடுத்தெரு - துணை செயலாளர் 1: M.M. ஷேக் தாவூது – 99422 57585 – கீழத்தெரு
- துணை செயலாளர் 2: M.A. ஜெஹபர் அலி – 98419 17827 நெசவுத் தெரு
- பொருளாளர்: PMS. முகம்மது அமீன் – 63853 99934- கடற்கரை தெரு
- ஒருங்கிணைப்பாளர்: T.A. அஹமது அனஸ் – 99942 47111 – புதுத் தெரு
எல்லாம் வல்ல அல்லாஹ் புதிதாக தேர்வான இந்நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற உதவு வானாக என பிரார்த்தனை செய்து, கஃப்பாரா துஆவுடன் கூட்டம் இனிதே முடிந்தது.
தகவல்:
நிர்வாகம்,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு.



