தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று 30/10/2021 சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் செயலாக்கம் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழக அரசு தலைமை கொறடா கோவி. செழியன் எம்எல்ஏ, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா கந்தபுணனி இ.கா.ப அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம்(தஞ்சை), க. அன்பழகன்(கும்பகோணம்), துரை. சந்திரசேகரன்(திருவையாறு), என். அசோக்குமார்(பேராவூரணி), கூடுதல் ஆட்சியர்(வருவாய்) சுகபுத்ரா இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., சார் ஆட்சியர் பாலசந்தர் இ.ஆ.ப. உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.




