அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சி
ஆதம் நகர் ( MSM லேன்,எல்லைக்கு உட்பட்ட KSA லேன், ஷப்னம் லேன் மற்றும் மஸ்னி கார்டன் பகுதியில் தவ்ஹீத் லேன் ,அவலநிலை தற்போது மழை காலங்கள் என்பதால் தெரு சாலை மற்றும் குறுக்கு சாலையில் மக்கள் யாரும் செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் மற்றும் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மழை நீர் மற்றும் கழிவுநீர் கொசு உற்பத்தி அதிகமாகி உள்ளது. சுற்றுப்புற சுகாதாரமும் சீர்கேடு அடைந்துள்ளது.
மழை நீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதால், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், கொரோனா ,மஞ்சள் காமாலை, விஷ காய்ச்சல், போன்ற தொற்று நோய்கள் உருவாகும் என, பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
எனவே, தெருக்களில், மழை நீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் இருக்க, ஏரிப்புறக்கரை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
