Home » அதிரை அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் தேவை! ஆய்வுக்கு வந்த அதிகாரியிடம் கோரிக்கை !!

அதிரை அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் தேவை! ஆய்வுக்கு வந்த அதிகாரியிடம் கோரிக்கை !!

0 comment

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 9ஆம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.

பன்னெடுங்காலமாக செயல்பட்டு வரும் இக்கல்வி ஸ்தாபனத்தில் ஏராளமான அதிரையர்கள் கல்வி பயின்று இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பழுதடைந்த வகுப்புகளை அகற்றிவிட்டு புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என கூறப்பட்டது.

ஆனால் போதிய அளவு வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கன மழையினால் நீர் வகுப்பறைகளை சூழ்ந்தது.

இதனால் மாணாக்கர்கள் கல்வி பயில இயலவில்லை, இதுகுறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நகர திமுக செயலாளர் இராம குணசேகரன் மற்றும் 13வது வார்டு திமுக பொறுப்பாளர் சமூக ஆர்வலர் சைஃபுதீன் ஆகியோர் பள்ளிகூடத்தின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும், குறிப்பாக போதிய வகுப்பறை வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தருமாறு என கேட்டு கொண்டனர்.

இதனை ஏற்ற அதிகாரிகள் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி மாலதி கல்வித்துறை அதிகாரி உள்ளிட்டவர்களை வரவேற்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter