அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேர்மன்வாடி,சாலையோரத்தில் கலிபா உமர் பின் கத்தாப்(ரலி) சேவை மையம் சார்பாக உணவு வங்கி திறந்து வைக்கப்பட்டது.இந்த உணவு வங்கியினை சேவை மையத்தின் நிறுவனர் நயீம்,சிறப்பு விருந்தினர்கள் சிராஜ்,ரகு மற்றும் தினேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கலிபா உமர் பின் கத்தாப்(ரலி) சேவை மையம் கடந்தாண்டு துவங்கப்பட்டு ஆதரவற்றோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.இந்த சேவை மையம் மூலம் திருமணங்களின் போது மீதமாகவும் உணவுகளை உரிமையாளர்களின் அனுமதியோடு எடுத்து அதனை சரியான முறையில் பேக்கிங் செய்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற முதியோர், குடும்பத்தாரால் கைவிடப்பட்டோர், உழைத்து உண்பதற்கு முடியாத நிலையில். வயிற்றுக்கு உணவுக்காக பலரிடமும் கையேந்தியும், பசியாற முடியாமல் இருப்பவர்களுக்கு இலவசமாக தேடிபோய் உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் உணவு வங்கியில் பழம், பிஸ்கெட், ரொட்டி, சாத வகை, குடிநீர் பாட்டில் என தேவையான உணவு வகைகள் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும். தேவைப்படுவோர், தாங்கள் விரும்பும் உணவு வகையினை எடுத்து உண்டு பசியாறலாம்.
திறப்புவிழாவில் சேவை மையத்தின் உறுப்பினர்கள் நெய்னா,ஹக்கீம்,அதிரை கலீபா,மர்ஜூக்,சமீர்,பாய்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.