பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் பிசியாக உள்ளனர்.
அதிரை நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டில் சுயேட்ச்சையாக போட்டியிடும் தமுமுகவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் A.H.சௌதா இன்று மாலை அதிரை நகராட்சி அலுவலகத்தில் ஹலீமா அம்மாள் முன்மொழிய வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த வேட்புமனு தாக்கலின் போது அதிரை நகர தமுமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு வேட்பாளருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும், உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில், அதிரை நகராட்சியின் 6வது வார்டு களத்தை தமுமுக தேர்தல் பணிக்குழு தீவிரப்படுத்தி வருகிறது.


