67
அதிரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் போட்டியிட மாற்று வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 173 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவற்றின் மீதான பரிசீலனை இன்று நகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் முன்னிலையில் வார்டுவாரியாக நடைபெற்றது. இதில் 25 மற்றும் 27வது வார்டுகளை சேர்ந்த 2 பேரின் மனுக்கள் வரி பாக்கி காரணமாக நிராகரிக்கப்பட்டன. இதன் மூலம் மாற்று வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 171 பேர் களத்தில் உள்ளனர். திங்கட்கிழமை வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.