Home » அதிரை மக்களிடம் தேர்தல் நிதி கேட்கும் SDPI! வேட்பாளர்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய கூடாது என கட்டளை!!

அதிரை மக்களிடம் தேர்தல் நிதி கேட்கும் SDPI! வேட்பாளர்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய கூடாது என கட்டளை!!

0 comment

ஊழலில்லா உள்ளாட்சி, நேர்மையான நல்லாட்சி என்ற குறிக்கோளோடு அதிரை நகராட்சியின் 14 வார்டுகளில் மஜக, ஒன்றுபட்ட சமூதாய கூட்டமைப்பு, தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவோடு SDPI போட்டியிடுகிறது. இந்நிலையில் வேட்பாளர்கள் தங்களின் சொந்த பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய கூடாது என SDPI கட்டளையிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மாவட்ட பொது செயலாளர் முகம்மது புகாரி, மக்கள் தரும் நிதியை கொண்டு தேர்தலை சந்திப்போம், மக்களுக்காகவே சேவையாற்றுவோம். சொந்த பணத்தை போட்டு செலவு செய்ய அரசியல் ஒன்றும் வியாபாரம் அல்ல. தேர்தல் சமயத்தில் முதல் போட்டு வெற்றிபெற்ற பின் ஊழல் செய்து சம்பாரித்துவிடலாம் என பிற கட்சிகளில் பலர் கனவு காண்கின்றனர். ஊழலின் ஆணிவேரை பிடுங்கி எறியும் விதமாக SDPI வேட்பாளர்கள் யாரும் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய கூடாது என்ற தலைமையின் கட்டளையை ஆரம்பம் முதலே கடைபிடித்து வருகிறோம். எனவே அதிரையில் நேர்மையான நல்லாட்சி அமைய அதிரை மக்கள் தாராளமாக நிதி தாருங்கள். +91 9942268351, +91 9600809828 ஆகிய எண்களில் எங்களை தொடர்பு கொண்டு தேர்தல் நிதியை அளிக்கலாம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter