74
Adirai vision 2027 என அறிவிக்கப்பட்டிருக்கும் SDPIன் தேர்தல் அறிக்கையில், வார்டு உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் அதிரை நகர்மன்ற கூட்டம் நேரலை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய இளைஞர்களுக்கு அதிரை நகராட்சியில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதி அளித்திருப்பதுடன், அதிரை நகராட்சி சேவைகளை மக்கள் பெற ஏதுவாக “ஸ்மார்ட் அதிரை” எனும் மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்படும் என SDPI தெரிவித்துள்ளது. இந்த மொபைல் ஆப் மூலம் குப்பை, தெருவிளக்கு உள்ளிட்ட பல பிரச்சனைகளை மக்கள் பதிவு செய்து தீர்வுபெற முடியும். இதேபோல் 8 பிரிவுகளில் மொத்தம் 27 செயல்திட்டங்களை SDPI அறிவித்துள்ளது.