தமுமுக தஞ்சை மாநகர தெற்கு மற்றும் வடக்கு சார்பாக இன்று தஞ்சை ரயில் நிலையம் அருகாமையில் பாபர் மசூதியை இடித்த கயவர்களை கண்டித்து பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மமக மாவட்ட தலைவர் S.அஹமது ஹாஜா தலைமையேற்று, M.ஜஃபருல்லாஹ், Er.A. முஹம்மது இலியாஸ், G.முஹம்மது செல்லப்பா,M.முஹம்மது சலீம் புலவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலர் A.ஷேக் மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து விசிக கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், மமக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் சரவண பாண்டியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்ற இறுதியாக தலைமைக் கழக பேச்சாளர் கோவை.ஜெய்னுலாப்தீன் கண்டன உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, எதிர்வரும் ஆண்டிற்குள் இஸ்லாமியர்களிடம் பாபர் மசூதியை ஒப்படைக்காவிடில் அடுத்த டிசம்பர் 5 ம் நாள் தமுமுகவின் தலைமை கட்டளையிட்டால் அயோத்தி சென்று தடையை உடைத்து பாபர் மசூதியை கட்டுவோம் என்றார். இறுதியாக தஞ்சை ரியாஸ் அஹமது நன்றியுரை கூறினார். இந்த ஆர்பட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துக் கொண்டது குறிப்பிடதக்கது.
பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தஞ்சையில் தமுமுக ஆர்பாட்டம்!!
204
previous post