அதிரை 13வது வார்டு கவுன்சிலராக SDPI கட்சியின் பெனாசிரா அஜாருதீன் வெற்றிப்பெற்றுள்ளார். இந்நிலையில் 13வது வார்டுக்குட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக SDPI அஜாருதீன் மற்றும் காதர் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது சிலர், குட்டியானையில் குப்பைகளை கொண்டு வந்து ஆணைவிழுந்தான் குளத்தில் கொட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வாகனத்தில் வந்தவர்களை சுற்றிவளைத்த அவர்கள், குளத்தில் கொட்டிய குப்பைகளை மீண்டும் வாகனத்தில் ஏற்ற செய்தனர். பின் மதுக்கூர் சாலையில் உள்ள குப்பை கிடங்கிற்கு சென்ற அஜாருதீன், குப்பை கிடங்கை பார்வையிட்டதோடு இனி ஆணைவிழுந்தான் குளத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து அந்த குளத்தை மீட்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நகராட்சி பணியாளர்களுக்கு அறிவுகளை வழங்கினார்.
முன்னதாக அதிரை தக்வா பள்ளிவாசல் அருகே உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.