173
அதிராம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடு நிலை பள்ளியில் கடும் மழையினால் தேங்கிய நீரை வெளியேற்ற முயற்ச்சிகள் மேற் கொள்ளபட்டது.
தாழ்வான பகுதி என்பதால்,நீரை வெளியேற்றுவதில் சிக்கல் நீடித்து வந்தன.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுகவின் கவுன்சிலர் ராலியா சைபுதீன் வெற்றி பெற்றார் அதனை தொடர்ந்து நேற்று நகர ஆணையரை நேரில் அழைத்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனடிப்படையில் இன்று முதல் கட்ட பணியாக நீரை முழுவதுமாக வெளியேற்றப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உரிய வல்லுனர்கள் கொண்டு ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக கவின்சிலர் தெரிவித்து இருக்கிறார்.