அதிரையில் கடந்த நகர்மன்ற தேர்தலில் 20வது வார்டில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷேக் அப்துல்லாஹ் வெற்றிவாய்ப்பை இழந்தார். இருப்பினும் வார்டு மக்களின் நலன் சார்ந்த பணிகளில் தான் ஈடுபடுவேன் என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திட்டமிடலுக்காக நடந்த சாலை அளவெடுத்தல் பணியை ஷேக் அப்துல்லாஹ் ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட இருக்கும் சாலையின் தரம் மற்றும் உறுதித்தன்மை குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது தாமே டேப் பிடித்து அளவை பணிக்கு ஷேக் அப்துல்லாஹ் உதவியது பணியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.