அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே நீண்ட நெடிய காலமாக மக்கள் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்து வந்தனர்.
குப்பை கூண்டு கண்காணிப்பு என பலகட்ட முயற்ச்சிகளும் தோல்வியில் முடிந்ததால் சாலையோர பூங்காவை அமைத்து பார்ப்போம் என்ற முடிவுக்கு அதிரை இஸ்லாமிக் வெல்ஃபேர் அசோசியேசன்(AIWA) நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
அதன்படி அங்கிருந்த குப்பை மேட்டை தீயிட்டு கொளுத்தி அப்பகுதியில் சாலையோர பூங்கா அமைக்கபட்டது.
இதற்க்காக சுகாதார முன்னேற்ற கழக நிர்வாகி தமீம் அவர்களின் உதவியால் அங்கு பூச்செடிகள் உள்ளிட்ட தாவரங்களை நட்டு பராமறிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர் ராளியா சுகைப் பூங்காவை அகற்ற முயற்ச்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து அய்வா நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில் அந்த சாலையோர பூங்கா அருகே சத்துணவு கூடம் இருக்கிறது என்றும் இதனை அகற்ற கவுன்சிலர் ஏன் மல்லுகட்டுகிறார் என கேள்வி எழுப்பினார்.
இந்த பூங்காவை பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஊழியர்கள் அப்பகுதி மக்கள் வரவேற்று உள்ள சூழலில் இதனை அகற்ற முற்படுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.
மேலும் பூங்காவை இது நாள் வரையிலும் பராமரிப்பு செய்து வருகிறோம் என்றும் அங்குள்ள செடிகளை யாரோ சில மர்ம நபர்கள் செடிகளை சேதப்படுத்தி வருகிறார்கள் என்றும் ஆதங்கப்படுகிறார்கள்
அய்வா சங்கத்தினர்.
