அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் சாலை மறியல்.
ஓகி புயல் அச்சம் நீங்கிய பிறகும் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்கு யாரையும் அனுமதிப்பதில்லை.இதனால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் ஓகி புயல் காரணமாக காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்களை உடனடியாக அரசு போர்கால அடிப்படையில் மீட்காததை கண்டித்தும் இன்று(9.12.2017) தஞ்சை மாவட்ட மீனவர்கள் சாலை மறியல் செய்தனர்.
இதனையறிந்து வந்த காவல் துறை அதிகாரிகள் ஆர்டிஓ பேச்சுவார்த்தைக்கு வருவதாகவும் என்று கூறியதால் மீன்வர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.மறியல் காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படுகிறது.
இதற்கிடையில் நாகை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சம்பவ இடத்திற்கு வந்து மீனவ பிரதிநிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
மறியல் போராட்டத்தில் சங்கதலைவர் A.தாஜுதீன், மாவட்ட தலைவர் ஆ.இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் ஆ.வடுகநாதன்,கள்ளிவயல் தோட்ட சங்க பொருளாளர் அ.இப்றாகிம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.