Home » மதுக்கூர் தமுமுக சார்பில் ஏழைகளுக்கு 3,36,500 ரூபாயில் உதவி!

மதுக்கூர் தமுமுக சார்பில் ஏழைகளுக்கு 3,36,500 ரூபாயில் உதவி!

0 comment

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மதுக்கூர் பேரூர் கழகம் சார்பில் கடந்த 3 வருடங்களாக நோன்பு வைக்க கூடிய ஏழைகளுக்கு ஒரு குடும்பத்துக்கு தலா 3000ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் சுமார் 128 குடும்பங்களுக்கு 3,36,500 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

அதன்படி நிகழாண்டுக்கான ரமலான் பொருள்கள் வழங்கும் நிகழ்வுக்கு தமுமுக பேரூர் கழக தலைவர் ராசிக் அகமது தலைமையில், பேரூர் கழக செயலாளர் தாஜுதீன், பேரூர் கழக பொருளாளர் முகமது சேக் ராவுத்தர், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஃபவாஸ் கான், முன்னாள் மாவட்ட பொருளாலர் பொறியாளர்.இலியாஸ், முன்னாள் தலைவர்கள் ஹாஜா மைதீன், முஜிபுர் ரஹ்மான், மாவட்ட ஊடக அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், இளைஞர் அணி துனை செயலாளர் இத்தியாஸ், சாகுல் ஹமீது, சபீர், அப்துல் மாலிக் நிகழ்வில் பங்கேற்று 128 குடும்பங்களுக்கு ரூ 3.36,500 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter