
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நெற்கதிர் மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் சார்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அப்போது சங்கத்தின் சார்பாக சித்துக்காடு வடக்கு மாரிக்கண்ணு மாற்றுத்திறனாளி பெண்மணியின் மகன் குமரேசன், மகள் ஸ்வேதா ஆகியோருக்கு கல்வி பயில்வதற்கு சங்கம் முழு பொறுப்பேற்று புத்தகங்கள் பை அனைத்தும் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் அந்த மாற்றுத்திறனாளி பெண்மணி வீட்டிற்கு இலவச மின்சாரம் இணைப்பதற்கு ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் அங்கன்வாடி பணியாளர்களை கொண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மேலும் 10 நாட்கள் நீட்டிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில்
சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.பஹாத் முகமது, மாவட்ட பொருளாளர் சுதாகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் ஜம் ஜம் அஸ்ரப், ஒன்றியச் செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் நிதிஷ்குமார், தஞ்சாவூர் ஒன்றிய தலைவர் விமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.