Wednesday, February 19, 2025

ஜனவரி 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு முடிவு !!!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை : ஜனவரி 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால் மட்டுமே ரேஷன் பொருள் வழங்க வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 1 கோடியே 95 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் (ரேஷன் கார்டு) உள்ளனர். இவர்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளை நவீனமயமாக்கும் வகையிலும், போலி கார்டுகளை நீக்கும் வகையிலும் பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை ரேஷன் கடை ஊழியர்களிடம் வழங்கும்படி அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, ஆதார் எண் வழங்கப்பட்டு வந்ததை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
இதுவரை சுமார் 1.50 கோடி பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 45 லட்சம் பேருக்கு கார்டு வழங்கப்படவில்லை. இதில் 25 லட்சம் பேர், ஸ்மார்ட் கார்டு கோரி தங்கள் ஆதார் எண்ணை ரேஷன் கடையில் சமர்ப்பித்துள்ளனர். ஆனால் மீதம் உள்ள 20 லட்சம் பேர் இதுவரை ஆதார் எண் வழங்கவில்லை. அரசு பலமுறை காலநீட்டிப்பு செய்தும் கூட அந்த 20 லட்சம் பேர் ஆதார் எண் வழங்காமல் உள்ளனர். இதனால் அந்த 20 லட்சம் ரேஷன் கார்டுகளும் போலியாக இருக்கலாம் என்று உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் வரும் ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் அதற்காக ஆதார் எண் வழங்கியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழைய ரேஷன் கார்டுக்கு பதில் புதிய நவீன ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 90 சதவீதம் பேருக்கு கார்டு வழங்கி விட்டோம். 20 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண் வழங்காமல் உள்ளனர். அவர்களுக்கு பல மாதங்களாக வாய்ப்பு கொடுத்து வந்தும் இணைக்காமல் உள்ளனர். வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஸ்மார்ட் கார்டு இருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது. ஆனாலும், அந்த 20 லட்சம் கார்டுகளை உடனடியாக நீக்க மாட்டோம். அவர்களுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகும் ஆதார் எண் வழங்காவிட்டால், அந்த கார்டுகள் அனைத்தும் போலியானவை என அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படும். அப்படி நீக்கப்பட்டால், அரசுக்கு ரேஷன் செலவு மிச்சம் ஆகும். இதன் மூலம் மற்றவர்களுக்கு கூடுதலாக உணவு பொருள் வழங்க முடியும் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

தமிழகத்தில் 'ஸ்கிரப் டைஃபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள்,...

மிரட்டும் கனமழை : 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும்...

⭕⭕ BIG BREAKING: அதிரை கடற்கரையில் ரூ.2கோடி மதிப்பிலான போதை பொருள்...

அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின்...
spot_imgspot_imgspot_imgspot_img