அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Fairfield மஸ்ஜித் அல் நூர் பள்ளியில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மேயர் ப்ரைஸ், காவல்துறை உட்பட அமெரிக்க அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் மேயர் பேசும் போது,” உங்களை பார்த்து மிகவும் மகிழ்வடைகிறேன். முஸ்லிம்கள் எந்த பிரச்சனை இருப்பினும் எங்களை அணுகலாம்” என்றார்.
அப்போது இஸ்லாத்தின் மாண்பு பற்றியும், நோன்பின் நோக்கமும் பற்றியும் இமாம் பரீது எடுத்துரைத்தார். பிறகு இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் முகல்லாஹ் வாசிகளான அதிரையர்களும் பங்கேற்றனர்.