Home » ஞானவாபி பள்ளியில் தொழுகையை தொடரலாம் – லிங்கம் இருந்ததாக கூறப்படும் பகுதியை பாதுகாக்க உத்தரவு !

ஞானவாபி பள்ளியில் தொழுகையை தொடரலாம் – லிங்கம் இருந்ததாக கூறப்படும் பகுதியை பாதுகாக்க உத்தரவு !

by
0 comment

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரனை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது.

ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கூடிய ஆய்வு முற்றிலும் நிறைவடைந்த நிலையில், மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதுகுறித்து நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு ‘அஞ்சுமன் மஸ்ஜித்தின்’ நிர்வாகக் குழுவின் மனுவை இன்று விசாரித்தது ஏற்றனர்.

இன்றைய விசாரணையின் முடிவில், ஞானவாபி மசூதில் முஸ்லிம்கள் எந்த தடையுமின்றி தொழுகை நடத்தலாம் எனவும் லிங்கம் கண்டுபிடிக்கபட்டதாக கூறப்படும் பகுதியை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், ஞானவாபி மசூதி வளாகத்திற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் மனுதாரரான இந்து பெண்களுக்கு, கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி கோர்ட்டு விசாரித்து வருகிறது. இதன் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ஞானவாபி மசூதிக் குழுவின் மனு மீதான விசாரணை அடுத்ததாக, வரும் 19ம் தேதி தொடரும் என்று ஒத்தி வைத்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter