Tuesday, February 3, 2026

அதிரையில் ஆரம்பமானது புஹாரி ஷரீஃப்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் 75 வருடங்களுக்கு மேலாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு இன்று மீண்டும் ஆரம்பம் செய்யப்பட்டது.

முன்னதாக காலை 6 மணிக்கு திக்ர் மஜ்லிஸ் துவங்கி, அதிரை மட்டுமல்லாது வெளி ஊரிலிருந்து வந்த உலமாக்கள் புஹாரி ஷரீஃப் ஓதினர். பின்னர் 7.40 மணிக்கு அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

இதனையடுத்து ஊரின் நலனுக்காகவும், அனைத்து முஸ்லிம்களின் நல்வாழ்வுக்காகவும் (பிரார்த்தனை) துஆ செய்யப்பட்டது.

75 வருடத்திற்கும் முன்னதாக அதிரையில் காலரா எனும் பெரும் நோயால் அதிரையர்கள் அவதிப்பட்டு நாளுக்கு நாள் உயிர் பலி ஆகி கொண்டிருந்த சூழலில், ஷைகுனா ஆலிம் அவர்களின் வழிகாட்டலின் படி 40 நாட்கள் தொடர்ந்து புஹாரி ஷரீஃப் ஓதுவது என தீர்மானிக்கப்பட்டு தொடர்ந்து ஓதப்பட்டு வந்ததன் விளைவாக இந்த தலைமுறை வரை காலரா நோய் இதுவரையிலும் அதிரையில் எட்டிப்பார்க்கவில்லை எனலாம்.

இன்று துவங்கய புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் ல் சுமார் 2,500 க்கும் மேறபட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img