46
கடந்த ரமலான் பிறை 01 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்கள் உட்பட 377 பேருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட உள்ளன.
இந்நிலையில், அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் தேர்வானவர்களுக்கு வழங்குவதற்கான ஊக்க பரிசுகளை அதிரை எக்ஸ்பிரஸ் நிரூபர் ஹாஜா முகைதீனிடம் Terri wear நிர்வாக இயக்குநர் முகம்மது இப்ராகிம் ஒப்படைத்தார். போட்டியில் தேர்வானவர்களுக்கு இந்த பரிசுகள் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும்.