திமுக பேரூர், நகர, ஒன்றிய, மாவட்ட கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அமைப்பு ரீதியாக திமுகவின் 72 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி. பாலசுப்பிரமணியன் இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக புதிய மா.செ. வாக கா. அண்ணாதுரை எம்எல்ஏ அறிவிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் விவரம் :
அவைத் தலைவர் – சுப. சேகர்
செயலாளர் – கா. அண்ணாதுரை எம்எல்ஏ
துணைச் செயலாளர்(பொது) – ஆர்.பி. ரமேஷ்
துணைச் செயலாளர்(ஆதிதிராவிடர்) – பொன். சத்தியமூர்த்தி
துணைச் செயலாளர்(மகளிர்) – ஞா. மைக்கேலம்மாள்
பொருளாளர் – எஸ்.எச். அஸ்லம்
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் – நா. அசோக்குமார், கூ. செல்வம்
பொதுக்குழு உறுப்பினர்கள் – அ.மு. ரூசுவெல்ட், அ. தனபால், அ. அப்துல் மஜீது, கௌ. கௌசல்யா

