தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று(16/12/2017) காலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற ஆட்சியர் கூறினார்.
பட்டுகோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம், பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, கழிவறை, கழிவு நீர் வாய்க்கால் மற்றும் சுகாதார சீர்கேடான பகுதிகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது DSP செங்கமல கண்ணன் , தாசில்தார், துணை ஆட்சியர் ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.