234
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மகபூப் அலியின் இல்ல திருமணவிழா அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலான இப்ராகிம், எம்.எம்.எஸ் குடும்பத்தினர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்று சாலிஹ்-ஹுமைரா மணமக்களை வாழ்த்தினர். அப்போது பேசிய சிவகங்கை மாவட்ட அரசு காஜி முகம்மது ஃபாரூக், அதிரை காதிர் முகைதீன் கல்லூரி விதைத்த அறிவின் பயனை தற்போது மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்றார். மேலும் அதிரை அறிவில் சிறக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த அவர், மணமக்களுக்காக அனைவரும் துஆ செய்ய வேண்டும் என கூறினார்.