அதிராம்பட்டினம் நகர ஐமுமுக,அமைப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆரிஃப்,ஷாகுல் ஹமீது குழுவினர் பல்வேறு சமூக பணிகளில் செயலாற்றி வருகிறார்கள். அதன்படி இன்று உடல் நலிவுற்ற ஒரு இந்து சகோதரர் மாரிமுத்து என்பவர் இறந்து விட்டதாகவும் அவரின் உடலை மயானத்திற்கு எடுத்து சென்றுஅடக்கம் செய்ய காவல்துறையினர் மேற்குறிப்பிட்ட சமூக ஆர்வலர்களின் உதவியை நாடியது,
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் மாரிமுத்துவின் உடலை மீட்டு இந்து மத சம்பிரதாயப்படி பொது மயானத்தில் அடக்கம் செய்தனர்.


இந்த சம்பவம் குறித்து அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்த கோபால் என்பவர் கூறுகையில் , இஸ்லாமியர்களின் இது போன்ற செயல்களினால் நாங்கள் அவர்களை பெரிதும் மதிக்கின்றோம் என்றும் எங்கள் ஊரில் நாங்கள் அண்ணன் தம்பிகளாக பழகி கொள்வதை அரசியல் ஆதாயம் தேடும் சில கட்சிகள் விரும்புவதில்லை அவர்களை எல்லாம் நாங்கள் புரந்திள்ளிவிட்டு ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.