Wednesday, March 18, 2026

13வது வார்டுக்கு இருளில் இருந்து விடுதலை எப்போது..? : கவனிப்பாரா SDPI ன் கவுன்சிலர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் 13வது வார்டு SDPI கட்சியின் கவுன்சிலராக தேர்வாகி இருப்பவர் பெனாசிரா அஜாருதீன். இந்த வார்டுக்கு உட்பட்ட பணிகளை செய்து வரும் பொறுப்பை அவர் சார்ந்துள்ள SDPI கட்சி கண்காணித்து வருகிறது. ஆனால், கடந்த ஓருமாத காலமாகவே இருளில் மிதக்கும் 13 வது வார்டுக்கு உட்பட்ட மின் கம்பங்களில் மின் விளக்குகள் பழுதாகி இருள் சூழந்து காணப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் இவ்வழியாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சென்று வர மிகவும் அச்சப்படும் சூழலில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர் வரும் ரமலானை கருத்தில் கொண்டு பழுதாகி இருக்கும் மின் விளக்குகளை அகற்றி ஒளி மிகுந்த விளக்குகளை பொருத்தி இருளில் இருந்து விடுதலை பெற்று தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை எனும் SDPI கட்சியின் தாரக முழக்கத்திற்கு மத்தியில், அக்கட்சியின் கவுன்சிலர் 13வது வார்டு மக்களை இருளில் இருந்து விடுதலை பெறச் செய்வது எப்போது என அப்பகுதி மக்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img