தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் அரசாங்கத்தை நம்பாமல் தங்கள் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர்கள் மும்புரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பிலால் நகர் பகுதியில் பல மாதங்களாக அடிப்படை தேவைகளை ஏறிப்புறக்கரை ஊராட்சி செய்து தருவது இல்லை என்றும், அதற்க்கு நடவடிக்கை எடுக்க கோரியும் இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதனால் எந்த வித பயனும் அளிக்காததால் தாங்களே களத்தில் இறங்கினர்.
இதனையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி நிர்வாகத்தை நம்பாமல் களம் இறங்கி தங்கள் பகுதியை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.