974
கடந்த ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2 கிராம் தங்கம், இரண்டாம் பரிசாக ஒரு கிராம் தங்கம், மூன்றாமிடம் பிடிப்பவருக்கு ரூ.3000/- மதிப்பிலான பரிசு மற்றும் 10 நபர்களுக்கு ஊக்க பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் ஊக்க பரிசுகளின் எண்ணிக்கையை அதிரை எக்ஸ்பிரஸ் உயர்த்தியுள்ளது. அதன்படி 30 நபர்களுக்கு ஊக்க பரிசுகள் வழங்கபடும் என்றும் அதற்கு தேர்வானவர்களின் விபரங்கள் அவர்கள் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணின் வாயிலாக தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் பரிசளிப்பு விழா குறித்த அறிவிப்பும் மிக கூடிய விரைவில் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.