தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம். இதன் 17ம் ஆண்டு துவக்கம், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்குதல், இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா ரிச்வே கார்டனில் நடைபெற்றது. அதிரை தாருல் தவ்ஹீத் நிறுவன செயலாளர் ஜெமில் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பட்டுக்கோட்டை வருவாய் ஆய்வாளர் ஷேக் உமர்ஷா, காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அகமது கபீர், பிரிலியண்ட் பள்ளி தாளாளர் சுப்ரமணியன், TIYA மாலிக் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் வக்ப் சொத்துக்களை மீட்டமைக்காக துலுகா பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி, பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்ட MKN மதரஸா டிரஸ்ட் முன்னாள் செயலாளர் முஹம்மது மீராசாஹிப், விமானத்துறையில் சாதித்தமைக்காக ஏர் இந்தியாவின் திருச்சி விமான நிலைய மேலாளர் அதிரை MMS.ஜாபர் சாதிக் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.