Wednesday, March 18, 2026

அதிரையில் நடைபெற்ற மருத்துவ முகாம்! நூற்றுக் கணக்கில் பயனடைந்த பொதுமக்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை சுற்றுவட்டாரத்திலேயே 24 மணிநேரம் இயங்க கூடிய ஒரே மருத்துவமனையாக ஷிஃபா மருத்துவமனை திகழ்கிறது. குறிப்பாக நள்ளிரவில் அவசர சேவைக்கு சுற்றுவட்டார கிராம மக்கள் அதிரை ஷிஃபா மருத்துவமனையை அணுகுகின்றனர். இந்நிலையில், காவேரி மருத்துவமனையுடன் (ஹார்ட் சிட்டி) இணைந்து இலவச இருதய மருத்துவ முகாமை ஷிஃபா மருத்துவமனை நடத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முகாமில் அதிரை மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த 163 பேர் பங்கேற்று இலவச மருத்துவ பரிசோதனை செய்துக்கொண்டதுடன் சிறப்பு மருத்துவர் T.ஜோசப் MD., DM (Cardio)., DNB (Cardio)., MRCP (Lon)., PDF (Electrophysiology)., Consultant Interventional Cardiologist & Lead Electrophysiologist இலவச ஆலோசனை வழங்கினார். இதனையடுத்து இவரை அதிரை மருத்துவர் ஹக்கீம் பொன்னாடை போற்றி வாழ்த்தினார். இதனிடையே மக்களின் தேவையறிந்து இலவச இருதய சிறப்பு முகாமை நடத்திய ஷிஃபா மற்றும் காவேரி மருத்துவமனைகளின் நிர்வாகத்திற்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img