
அதிரை திமுகவில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சேர்த்து அக்கட்சிக்கு புத்துயிர் கொடுத்தவராக முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லம் கருதப்படுகிறார். இதனால் மாவட்ட பொருளாளர் பதவி அவருக்கு தேடி வந்தது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாளில் திமுகவுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் வகையில் கொண்டாட முடிவு செய்த அஸ்லம், சாமானியர்களுக்கு அழைப்புவிடுத்தார். இதனையடுத்து அதிரையில் உள்ள தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொடியேற்றும் விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது திமுகவின் இருவண்ண கொடியை அக்கட்சியின் சிறுபான்மை நல உரிமை பிரிவின் மாவட்ட தலைவர் ஜமாலுதீன் ஏற்றிவைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வு அதிரை மக்களிடையே பேசும் பொருளாகியுள்ளது.