Wednesday, March 18, 2026

அதிரையில் சிறப்பு பிரார்த்தனையுடன் ஆரம்பமான புஹாரி ஷரீஃப் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் 78 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று (19-06-2023) திங்கட்கிழமை துவங்கியது.

78 ஆண்டுகளுக்கு முன்னர் அதிரை நகர பெரும்பாலான மக்கள் காலரா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்பை சந்தித்தனர்.

இதனையடுத்து காலரா நோயை கட்டுப்படுத்த ஹஜ்ரத் ஷைகுனா ஆலீம் அவர்களின் ஆலோசனைப்படி 40 நாட்கள் புஹாரி ஷரீஃப் ஓதுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கொடும் காலரா நோயால் பீடிக்கப்பட்டு உயிர் பலியை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அன்று ஆரம்பித்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் காரணத்தினால் இன்று வரையிலும் அதிரை நகரத்தில் காலரா நோய் எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது அதிரையின் வரலாறாக உள்ளது.

இவ்வருடத்திற்கான புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் துவக்கத்தில் 1000 க்கும் அதிகமானோர் அதிலும் குறிப்பாக, 500 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img