Home » அதிரையில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி! ஹஜ் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட அழைப்பு!!

அதிரையில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி! ஹஜ் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட அழைப்பு!!

by அதிரை இடி
0 comment

அஸ்ஸலாமு அழைக்கும், ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA) சார்பாக ஹஜ் பெருநாளை முன்னிட்டு ‘YOUTH MILAN’ மாபெரும் இளையோர் சந்திப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 30.06.2023 வெள்ளிக்கிழமை மற்றும் 01.07.2023 சனிக்கிழமை ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

முதல் நாள் அன்று 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் & 8 வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இப்போடிகளில் பங்குபெற விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்

https://forms.gle/LWwyfeb1R9qNHQN3A

01.07.2023 அன்று மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை Youth Milon எனும் இளைஞர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவை சார்ந்த (அனைத்து இளைஞர்கள்) மற்றும் பிற சங்கங்களை சார்ந்த இளைஞர் அமைப்பு நிர்வாகிகளுடனான சந்திப்பு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இந்நிகழ்வுகளில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு

ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு-SISYA

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter