Home » அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!(படங்கள்)

0 comment

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அதிராம்பட்டினம் பன்னாட்டு லயன்ஸ் சங்கத் தலைவர் மேஜர் கணபதி தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக குப்பாசா அஹமது கபீர், செயலாளராக எம். ஹாஜா நசுருதீன், பொருளாளராக எம். நியாஸ் அகமது மற்றும் பொறுப்பாளர்கள் பதவியேற்றனர்.

இவர்களை முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ். முகமது ரஃபி பணியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதில் அதிராம்பட்டினம் முன்னாள் பன்னாட்டு லயன்ஸ் சங்க தலைவர்கள் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து வருகை தந்த லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து ஏழை எளிய 10 பயனாளிகளுக்கு 10 கிலோ அரிசி பையுடன் மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருள்கள், ஒரு நபருக்கு தையல் இயந்திரம் வாங்க 7500 ருபாய் வழங்கப்பட்டது. 3 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை, 10 பள்ளிகளை சேர்ந்த 10ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு கேடயம் கொடுத்து சிறப்பு செய்யப்பட்டது. மேலும் காதர் முகைதீன் கல்லூரியில் பயிலும் 3 ஆசியர்களுக்கு கேடயம் கொடுத்து சிறப்பு செய்யப்பட்டது. அதோடு விளையாட்டு துறையில் நியூசிலாந்தில் தங்கம் பதக்கம் வென்ற லோக பிரியாவுக்கு கேடயம் கொடுத்து சிறப்பு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் அதிராம்பட்டினம் அரிமா சங்கம் இயக்குநர்கள், மாவட்டத்தலைவர், சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இறுதியில் சாசன தலைவர் பேராசிரியர் லயன் எம் ஏ அப்துல் காதர் அவர்களுக்கு கேக் வெட்டி இரவு விருந்துடன் அனைவருக்கும் செடிகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter