அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரியின் நிர்வாகம் தஞ்சை வக்பு வாரிய கண்கானிப்பாளர் தாரிக் என்வரின் கீழ் இயங்கி வருகிறது.
சமீபத்தில் மாற்றலாகி தஞ்சைக்கு வந்த தாரீக் என்பவர் கல்லூரியின் நிர்வாகத்தை சரிவர செய்யவில்லை எனவும், கல்லூரியின் முதல்வர் அழைப்புகளை எல்லாம்,நிராகரிப்பதாக கூறப்படுகின்றது.
ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பேராசியர்கள்/ நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்லளுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் உள்ளிட்டவைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இதனை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வக்பு வாரிய கண்கானிப்பாளர் தாரிக் இடம் நமது செய்தியாளர் பேச முயன்றிருக்கிறார், அப்போது பேசிய கண்காணிப்பாளர் நேரிடையாக அதிராம்பட்டினம் சென்று கொண்டிருக்கிறேன் என கூறி இணைப்பை துண்டித்து இருக்கிறார்.





