அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்துஸ் ஷாதுலியா தரீக்காவில். வருடா வருடம் துல்ஹஜ் மாதம் பிறை 1முதல் முஹர்ரம் பிறை 14வரை 40 நாட்கள் புஹாரி ஷரீஃப் மஜ்லீஸ் தினமும் காலை வேளையில் ஓதப்பட்டு தப்ரூக் வழங்கப்படும் தினந்தோறும் ஆயிர கணக்கான மக்கள் இம்மஜ்லீசில் ஒன்று கூடுவார்கள்.









இந்த புஹாரி சரிஃப் மஜ்லீசிற்கு பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம்,பு துப்பட்டினம்,சேதுபாவா சத்திரம் செந்தலைப்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொள்வார்கள் இந்த நிலையில் புஹாரி ஷரிஃபின் இறுதி நாளான இன்று அதிகாலை திக்ரு மஜ்லீசுடன் தொடங்கியது இந்த திக்ரு மஜ்லீசை முஸ்தபா ரஷாதி தொடங்கிவைத்து பிரார்த்திதார் புஹாரி ஷரிஃப் மஜ்லீசை தொடங்கி அதன் விளக்க உரையை ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் முகம்மது குட்டி ஹழ்ரத் அவர்கள் வழங்கி துஆ செய்தார்கள்.
இந்த நிகழ்வில் ஆண்கள் பெண்கள் என 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு துஆ செய்தனர்.


