கணவன் தன்னுடைய மொபைல் wallpaper படத்தில் மனைவி அல்லாத வேறு பெண்களின் புகைப்படங்களையோ அல்லது சினிமா நடிகைகளின் புகைப்படங்களையோ வைத்து அதை அடிக்கடி பார்த்து கொண்டும் இருந்தால் அதை பார்க்கும் எந்த மனைவியும் அதை சாதாரண விசயமாக எடுப்பதும் இல்லை அவைகளை சகிப்பதும் இல்லை
இதன் காரணமாகவும் கணவன் மனைவிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிகழ்வதை ஆங்காங்கே காண முடிகின்றது
மனைவி என்றால் அவளுக்கு என்று சில வரைமுறைகள் உண்டு என்றும் இந்த விசயத்தில் எனது சுதந்திரத்திற்க்கு தடையாக என் மனைவி இருக்கிறாள் என்று சில கணவன்மார்கள் புலம்புவதையும் பார்க்க முடிகின்றது
இனி இதில் நீ தலையிட்டால் நடப்பதே வேறு என்று மனைவியை கடிந்து மோசமாக அடிக்கும் கணவன்மார்களும் ஏக வசனங்களில் மனைவியை திட்டும் கணவன்மார்களும் பரவலாக இருக்கவே செய்கின்றனர்
இதில் மனைவியின் கோபம் சரியானதா ?
அல்லது கணவனின் கோபம் சரியானதா ?
அல்லது கணவனின் உரிமைக்கு அவளது மனைவி தடையாக இருக்கின்றாளா ?
இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை இரு சாராரும் சிந்தித்தாலே இதற்க்கு அழகிய தீர்வை கண்டு விடலாம்
இவ்விசயத்தில் மனைவியர்களின் மீது ஆத்திரம் கொள்ளும் கணவன்மார்கள் ஒன்றை சிந்திக்க மறுக்கின்றனர்
தன்னை போலவே தன் மனைவியும் அவளது மொபைல் Wallpaper ல் தன் அல்லாத வேறு எவரையாவது இது போல் வைத்தால் அதை நாம் ஜீரணிப்போமா ? என்று ஒரு நொடி கூட கணவன்மார்கள் யோசிப்பது இல்லை ?
இது என் மொபைல் எனது மொபைல் Wallpaper ல் யாரை வேண்டுமானாலும் நான் வைத்து கொள்வது எனது உரிமை என்று மனைவியர்கள் வாதிட்டால் அப்போது அதை கணவன்மார்கள் எளிமையாக எடுத்து கொள்வார்களா அல்லது ஆத்திரம் கொள்வார்களா ? கணவனுக்கு மட்டும் தான் ரோஷம் உண்டு மனைவியர்களுக்கு ரோஷம் இல்லை அல்லது இருக்க கூடாது என்று கணவன்மார்கள் நினைப்பது என்ன நியாயம் ?
யாரோ ஒரு அந்நிய பெண்ணிண் புகைப்படத்தை தனது மொபைல் wallpaper ல் வைப்பதற்க்கு இந்த போராட்டம் ஏன் ? கட்டிய மனைவியிடம் இயற்கையாக இல்லாத ஒரு அம்சம் நாம் ரசிக்கும் ஒரு அந்நிய பெண்ணிண் புகைப்படத்தில் என்ன உள்ளது ? என்பதை கணவன்மார்கள் அவசியம் சிந்திக்க வேண்டும்
உண்மையில் உங்கள் மனைவியரின் இந்த கோபம் நீங்கள் அவர்களை வெறுக்கும் ஒன்றல்ல மாறாக அவர்களை இன்னும் அதிகமாக நீங்கள் நேசிக்க வேண்டிய அழகான கோபமே
தனக்கு உரிமையான கணவன் தன்னை மட்டும் தான் ரசிக்க வேண்டும் தனது கணவனின் பார்வையை அந்நிய பெண்களின் புகைப்படங்கள் கூட ரசித்து பார்க்க கூடாது என்ற பாசத்தின் வெளிப்பாடு தான் மனைவியர்களின் இந்த கோபத்தின் மறைமுக பின்னனியாகும்
அதே நேரம் தன்னை புறக்கணித்து விட்டு யாரோ ஒரு அந்நிய பெண்ணிண் புகைப்படத்தை Wallpaper ல் வைக்கும் அளவு கணவனின் மனோநிலை ஏன் தடுமாற்றம் அடைந்துள்ளது என்ற சிந்தனை மனைவியர்களுக்கு ஏற்பட வேண்டும்
வீட்டில் இருக்கும் மனைவியர்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு வெளியே செல்லும் போதும் திருமண வைபவங்களுக்கு செல்லும் போதும் பிறர்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக கண்ணாடி முன் நின்று ஒரு மணி நேரம் தன்னை அழகு படுத்தி அலங்காரப்படுத்தி செல்லும் மனைவியர்கள் தனது கணவனின் கண்களை தன் பக்கம் ஈர்க்க வைக்க தினமும் ஒரு பத்து நிமிடத்தை கூட கணவனுக்காக தன்னை அலங்காரம் செய்யும் பெண்கள் மிகவும் குறைவு
சந்தேகம் கொள்ளும் விதம் கணவனின் எதார்த்த நடவடிக்கை இல்லாத போது அடிக்கடி கணவனின் மொபைல் கேளரிகளை அவனே அறியாத விதம் ஆய்வு செய்யும் சந்தேக நோய்களையும் மனைவியர்கள் கைவிட வேண்டும்
குறிப்பாக மொபைல்களை யூஸ் செய்யும் கணவனும் மனைவியும் ரகசிய பாஸ்வேடுகளை ஒருவரை ஒருவர் மூடி மறைத்து மொபைலை யூஸ் செய்வதை தவிர்க்க வேண்டும்
மனம் மாறினால் வாழ்கை நிம்மதியே மாறிவிடும் என்பதை உணர்ந்து தம்பதியர்கள் இது போல் விசயங்களில் ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்யாமலும் நீதம் பேணியும் வாழ கற்று கொள்ள வேண்டும்
கணவன் மனைவியின் இணைப்பை அதிகரிக்க வேண்டிய ஆன்ட்ராய்ட் மொபைல்கள் தான் இன்று அநேகமான தம்பதியர்களுக்கு இடையில் பிணக்கை ஏற்படுத்தி வருகிறது
தன் பொறுப்பில் உள்ளவர்களை (மனைவியை கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்” என்று நபியவர்கள் சொன்னார்கள்
அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)
நூல்: அபூதாவூத் 1442
அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர் உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: புகாரி 56
நட்புடன் J .இம்தாதி