அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிரை தீன் கிளினிக் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிஸ்மி மெடிக்கல் எதிரே, மாஜ்தா ஜுவல்லரி அருகில் உள்ள தீன் கிளினிக்கில் நடைபெற்றது. இம்முகாமினை ரோட்டரி மாவட்டம் 2981 மண்டலம் 5இன் துணை ஆளுனர் ரொட்டேரியன்.ஏஸ்.பைசல் அகமது தொடங்கி வைத்தார்.
ரோட்டரி சங்க செயலாளர் ரொட்டேரியன் A. சமிருன்னிவாஸ் முன்னிலை வகித்தார். அதிரை தீன் கிளினிக் மருத்துவர்கள் டாக்டர்.A.bஅஃப்ரின் MBBS மற்றும் டாக்டர்.S. ஜியாவுர் ரஹ்மான் MBBS.DNB ஆகியோர் கலந்து கொண்டு பொதுநலன், சர்க்கரை, எழும்பு, தோல், குழந்தைகள், பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள்.
ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தீன் கிளினிக் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.இம்முகாமில் 200க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். முடிவில் ரோட்டரி சங்க பொருளாளர் ரொட்டேரியன் H.ஜமால் முகமது நன்றி தெரிவித்தார்.








