தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ – மாணவியர் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த 25ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குவளையில் உள்ள தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் திமுக நகர செயலாளரும், நகர்மன்ற துணைத்தலைவருமான இராம. குணசேகரன், 22வது வார்டு செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான செய்யது முஹம்மது, நகர்மன்ற உறுப்பினர்கள் பகுருதீன் மீராசாகிப், அப்துல் மாலிக், வார்டு கழக செயளாலர் முல்லை மதி, கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள் அஹமது ஹாஜா, முஹம்மது இஸ்மாயீல், நஸ்ருதீன் சாலிஹ், வார்டு கழக உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, ஹனி சேக், PL. செய்யது சலாஹுதீன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினர்.










