அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷெய்கு அலாவுதீன் அவர்களின் 584 ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 11 நாட்களாக நடந்து வந்த நிலையில், இன்று 29.08.2023 செவ்வாய்க்கிழமை அதிகாலை சந்தனக்கூடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பேண்டு வாத்தியங்களுடன் தர்காவை வலம் வந்தது.
முன்னதாக இன்னிசை கச்சேரியோடு வாணவேடிக்கைகளுடன் ஆரம்பமான சந்தனக்கூடு விழா சிறப்பு பிரார்த்தனையுடன் நிறைவு பெற்றது.