
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பழஞ்சூரை சேர்ந்தவர் கு.செல்வம். ஆளுங்கட்சியான திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில வர்த்தக அணி துணை தலைவராக இருந்து வருகிறார். இவரது மகளின் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இந்நிலையில் பழஞ்சூரில் உள்ள செல்வத்தின் வீட்டிற்கு இன்று தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர். கோவி. செழியன் எம்.எல்.ஏ வருகைதந்தார். இந்த சந்திப்பின்போது தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ, தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளரும் முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம், பழஞ்சூர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ், அதிரை இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் சாகுல் ஹமீது, வழக்கறிஞர் விக்னேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.