அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தின் முதல் மாதாந்திர கூட்டம் அதன் தலைவர் குப்பாஷா லயன் அஹமது கபீர் தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஜோனல் அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் இமாம் ஷாஃபி(ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 54 மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 3 பேர் மற்றும் இலங்கையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் MJF. லயன் ராம் ராஜுவால் சிறப்பு கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க தலைவர் குப்பாஷா அஹமது கபீர், செயலாளர் ஹாஜா நஸ்ருதீன், இணை செயலாளர் அல்அமீன், பொருளாளர் நியாஸ் அஹமது, வட்டார தலைவர் சாரா அஹமது, சாசன தலைவர் பேரா. அப்துல் காதர், உடனடி தலைவர் மேஜர் கணபதி, இயக்குனர் முருகானந்தம், மாவட்ட தலைவர் ஜலீலா முகைதீன், சாகுல் ஹமீது, பேரா. செய்யது அஹமது கபீர் மற்றும் லயன்ஸ் சங்க முன்னாள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.








